கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

   பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த பத்து பேரின் உடலில் ஜெல்லிமீன் பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெல்லிமீன் பட்டதால் தோல் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் குறித்த பகுதிகளில் சிவத்தல், அரிப்பு மற்றும் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து அவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.