புகையிரதம் மோதியதில் ஒருவர் பலி!

   கண்டி கடுகண்ணாவை – பிலிமத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் மார்க்கத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (21) இடம்பெற்ற இச்சம்பவத்தில் கண்டி, கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.]

சடலம் பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.