கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆண் பெண் இருவர் கைது!

 கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தங்க நகைகளுடன் பெண் உட்பட இருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாகத் தங்க நகைகளைக் கடத்துவதாக விமான நிலைய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை, சம்மந்துறை  சந்தேக நபர்கள்

சம்பவத்தில் அம்பாறை, சம்மந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 14 தங்க வளையல்கள், 3 தங்க மாலைகள், 3 தங்க மோதிரங்கள் மற்றும் தங்கக் காதணிகள் உள்ளிட்ட ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.