ரொறன்ரோவில் போதைப் பொருள் குற்றச் செயலுடன் தொடர்புடைய 3 நபர்கள் கைது!

ரொறன்ரோவில் போதைப் பொருள் குற்றச் செயலுடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்களிடமிருந்து போதைப் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார் மேற்கொண்ட ரோந்துப் பணிகளின் போது இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் செல்ல முயற்சித்த போதிலும் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.