கடன் மறுசீரமைப்பிற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை!

கடன் கொடுனர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு கடன் வழங்கிய சில நாடுகளுடன் நாளை (2024.06.26) கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவையில் இது தொடர்பான விபரங்களை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.