மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்!

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணான எய்லா ஆடம்ஸ் ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்த போராட்டத்தில் மூலம் இந்த பெண் உலக அளவில் வைரலாகி உள்ளார்.

குறித்த பெண், ஆண் பொதுவெளியில் மேலாடையின்றி செல்வது போல, பெண்களும் மேலாடையின்றி செல்லலாம் என்ற வகையில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சொல்வது மட்டுமின்றி அவரே மேலாடையின்றி பல இடங்களுக்கு சென்று, அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த விழிப்புணர்வு தொடர்பாக எய்லா ஆடம்ஸ் கூறியதாவது,

பொதுவெளியில் ஆண்கள் மேலாடையின்றி எந்த பயமும் தயக்கமும் இல்லாமல் செல்லும் போது பெண்களாலும் அப்படி செல்ல முடியும். நிர்வாணமாக இருப்பதைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை கொண்ட யாரையும் நான் புரிந்து கொள்ள முடியாது.

ஒருவேளை நான் மாட்டிகொண்டால் அவர்கள் புன்னகைத்து கடந்து செல்வார்கள். இல்லையெனில் வெற்றி குறியை (thumbsup) காண்பிப்பார்கள். சிலர் மனம் விட்டு சிரித்து கடப்பார்கள்.

30 வருடங்களுக்கும் மேலாக, நியூயார்க் நகரில் பெண்கள் மேலாடையின்றி செல்வது சட்டப்பூர்வமாக உள்ளது. பல பெண்கள் பாலின சமத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆடையை சட்டென கழற்றுவது (ஃபிளாஸ்) பொழுதுபோக்கு என்று நான் நினைக்கிறேன். ஆனால் இது மேலாடையின்மையை நடைமுறைக்கு கொண்டு வரும் ஒரு வழியாகும் என கூறினார்.