பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியாகிய செய்தி!

இலங்கையில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் இன்றைய தினம் (27-06-2024) வழமைப்போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு நேற்றையதினம் (26) விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு லோட்டஸ் வீதியில் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் நேற்று (26-06-2024) முன்னெடுத்த போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே இன்று வழமைப்போன்று பாடசாலைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையுடன், ஆசிரியர்-அதிபர்கள் ஒன்றிணைந்த குழு இன்று கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது