தேர்தல் ஆணையகத்தின் முக்கிய அறிவிப்பு!

அதிபர் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அத்தோடு, தேர்தல் நடவடிக்கைக்கு தேவையான பணிகளை ஆரம்பிக்கும் படி அரச அச்சக திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அதன் அதிகாரி கங்கானி லியனகே (Kangani Liyanage) தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல்
தேர்தல் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கோரப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க (Ratnayake) அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், அதிபர் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்தால் அதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசாங்க அச்சக பிரிவு அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.