எம்.பி சிறீதரன், குடும்பத்தினருக்கு மர்ம கும்பலால் அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் இன்று (28-06-2024) அவரின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

4 மோட்டார் சைக்கிள்களில் இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நிலையில், முகமூடிகள் அணிந்தவாறு வருகை தந்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் இருந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையிலான திட்டமிட்ட செயல் என்பதை, சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிக் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.