கொழும்பு பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, 2024 மே மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 0.9 சதவீதமாக இருந்து 2024 ஜூன் மாதத்தில் 1.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பணவீக்கம்

இதேவேளை உணவு அல்லாத வகையின் ஆண்டு பணவீக்கம் 2024 மே மாதத்தில் 1.3 சதவீதத்திலிருந்து ஜூன் 2024 இல் 1.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், உணவு பணவீக்கம் 2024 மே மாதத்தில் 0.0 சதவீதமாக இருந்து ஜூன் மாதத்தில்1.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.