அரச ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அரச சேவையின் நிர்வாக சேவை பிரிவு அதிகாரிகளுக்கு இன்று (2024.07.01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை கால சேவையின் அடிப்படையில் வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவுக்குப் பதிலாக, சேவையின் கால அளவைப் பொருட்படுத்தாமல் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவாக வழங்குவதற்கு கடந்த (24 ஆம் திகதி) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த கொடுப்பனவு இலங்கை பொறியியல் சேவை, இலங்கை கட்டிடக்கலை சேவை மற்றும் இலங்கை நில அளவையாளர் சேவை அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.