லண்டனில் இளம் பெண்ணுடன் இரகசிய உறவில் இலங்கை தமிழ் வர்த்தகர்!

லண்டனில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் வர்த்தகர் ஒருவர் மீது பெண்ணொருவர் பாலியல் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

குறித்த வர்த்தகரின் வர்த்தக நிலையத்தில் வேலை செய்யும் 21 வயதான தமிழ் பெண் ஒருவருடன் குறித்த வர்த்தகர் இரகசிய உறவைப் பேணி வந்துள்ளார்.

இந்த நிலையில் இளம் பெண்ணின் தாய் குறித்த வர்த்தகர் மீது பொலிஸாரிடம் முறைப்பாடு கொடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த முறைப்பாட்டில் 47 வயதான இலங்கை தமிழ் வர்த்தகர் தனது 21 வயது மகளைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொடர்பைப் பேணுவதாகவும் தனது வீட்டில் தனது கண்ணுக்கு முன்னாலேயே மகளுடன் உறவு கொள்வதாகவும் அதனைத் தட்டிக் கேட்டால் தன்னை தனது மகள் தாக்க முற்படுவதாகவும் மகளுக்கும் மதுபோதைப் பழக்கத்தை வர்த்தகர் பழக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மகள் மற்றும் வர்த்தகரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்த 48 வயதான மட்டக்களப்பைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த குடும்பப் பெண் லண்டன் சென்று கணவனுடன் வாழ்ந்து வந்து பின்னர் விவாகரத்துப் பெற்றவர் என தெரியவருகின்றது.

மேலும், மகளுடன் பாலியல் தொடர்பை பேணியதாக குற்றஞ்சாட்டிய வர்த்தகரின் வர்த்தக நிலையத்திலேயே குறித்த குடும்பப் பெண்ணும் வேலை செய்து வந்தவர் எனவும் வர்த்தகருடன் குறித்த பெண்ணும் பாலியல் தொடர்பில் ஈடுபட்டதாக வர்த்தகரின் மனைவி குற்றஞ்சுமத்தி வர்த்தகரைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் லண்டன் தமிழ்த்தரப்புக்கள் தெரிவிக்கின்றன.