இரா.சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவிப்பு!

மூத்த அரசியல்வாதியும் இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நேற்றையதினம் (30) உடல்நலக் குறைவால் காலமானார்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் வாதிகள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் , இந்திய பிரமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் இரங்கலை தெரிவித்திருந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க்.ஸ்டாலினும் இரங்கலை வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திரு. சம்பந்தன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கல்” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.