கடலலையால் இழுத்துசெல்லப்பட்ட மாணவர்

17 வயதுடைய மாணவர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (30) மாலை கல்கிஸ்ஸையில் கடற்கரையில் நீராடச் சென்ற சிலரில் மூன்று பேர் அலையில் சிக்கி அடித்துச் சென்றனர்.

இருவர் மீட்பு
அப்போது உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையின் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள், 2 பேரை மீட்ட நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

கல்கிஸ்ஸை அபேசேகர மாவத்தையில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன மாணவனைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.