மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தயராகும் ஆசிரியர் சங்கம்

தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அரச துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்று திரட்டி ஆசிரியர் அதிபர் கூட்டணியாக இணைக்க தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (01) பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம்

பாடசாலை நேரத்தின் பின்னர் நாளைய தினம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கைகள் கடுமையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் இந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.