ஹரக் கட்டாவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு!

ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு (Colombo) மேல் நீதிமன்றம் மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது ஹரக் கட்டா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் தப்பிச் செல்ல சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

​​பலத்த பாதுகாப்பு

இந்த வழக்கானது, இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குற்றம்சாட்டப்பட்ட ஹரக் கட்டா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.

இந்நிலையில், முன்வைக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் பரிசீலிக்கப்பட்டு பின்னர் வழக்கின் விசாரணை எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.