கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்ப்படுத்தும் வைரஸ்!

நாட்டு மக்களுக்கு ஜிகா வைரஸ் நோய் பரவல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இந்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதை அடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜிகா வைரல் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். தலைவலி, தோல் வெடிப்பு, காய்ச்சல், மூட்டு வலி உள்ளிட்டவை ஜிகா வைரஸ் தொற்றுப் பாதிப்பின் அறிகுறிகளாகும்.

மேலும், மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள கர்ப்பிணிப் பெண்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இந்திய சுகாதாரத்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழகத்தில் இந்தநோய் வேகமாகப் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.