ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்களது கட்சி இதுவரையில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுகுறித்த கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, வேட்பாளர் தொடர்பில் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.