கொழும்பு செல்வந்தர் துப்பாக்கிச் சூட்டில் 6 சந்தேக நபர்கள் கைது!

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் கட்டட வளாகத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள் சரமாரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினால், இருவர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 06 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கைது
அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவுடன் வணிக கட்டடத்தின் உரிமையாளரும் தொடர்புடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உயிரிழந்ததுடன் அவரின் படுகாயம் அடைந்துள்ளார்.