கொழும்பில் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவர்கள் மரணத்தில் சந்தேகம்!

கொழும்பு (Colombo) – கொம்பனிவீதியில் உள்ள அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவ, மாணவிகளின் மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்த மாணவியின் தந்தை முறைபாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் தந்தை சம்பவம் தொடர்பில் நேற்று (08) சட்டத்தரணி அசங்க தயாரத்ன ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த முறைபாட்டை செய்துள்ளார்.

பொலிஸ் விசாரணைகள்

இருப்பினும், பிரேத பரிசோதனையின் போது தனிப்பட்ட முறைபாடுக்கு அனுமதி வழங்க மறுத்த நீதவான், இது தொடர்பில் கொம்பஞ்சாவீதி பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு சட்டத்தரணிக்கு அறிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி, சம்பவம் தொடர்பில் கொம்பஞ்சாவீதிய பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் முன்னேற்றம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.