நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்!

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இரா.சம்பந்தனின் எம்.பி மறைவால் வெற்றிடமாகிய காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (09-07-2024) காலை நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் குகதாசன் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் சண்முகம் குகதாசன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு 16,770 வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.