கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள்!

கற்றாழை ஜெல் என்றாலே அது சருமத்துக்கும் தலைமுடிக்கு மட்டுமே பயன்படக்கூடிய அழகு சாதனப் பொருள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? அது இல்லாமல் கற்றாழையில் ஏராளமான மருத்துவப் பண்புகள் இருக்கின்றது உங்களுக்கு தெரியுமா?

கற்றாழையில் எவ்வாறான மருத்துவ குணங்கள் இருக்கின்றது என நாம் இங்கு பார்போம்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கற்றாழை ஜெலலில் கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய இரண்டு மினரல்களும் அதிகமாக இருக்கின்றன. இவை உடலில் மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களை சரியாக உறிஞ்சிக் கொள்ள உதவதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது.

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
கண்களில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு உடல் சூடு தான் காரணமாக இருக்கிறது. அதை சரிசெய்வதிலும் கற்றாழைக்கு முக்கியப் பங்குண்டு. நெஞ்செரிச்சலை குறைக்கும் இந்த நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்சினையைக் குறைக்க தினமும் காலையில் ஒரு துண்டு கற்றாழை ஜெல் அல்லது கற்றாழை ஜூஸ் குடிக்கலாம்.

மலச்சிக்கலை கட்டுப்படுத்தும்
இயற்கையாகவே மலச்சிக்கலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்றால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை சாறோ அல்லது ஜெலலோ சாப்பிட்டு வர மலச்சிகக்ல் பிரச்சினையே வராது.

சரும பொழிவு அதிகரிக்கும்
கற்றாழை ஜெல்லை நேரடியாக சருமத்தில் அப்ளை செய்வதால் கிடைக்கும் பயன்களை விட உள்ளுக்குள் சாப்பிடும் போது நிறைய நன்மைகள் கிடைக்கும். குடலை சுத்தமாக்கும். சீபம் சுரப்பைக் கட்டுப்படுத்தும். நோயெதிர்பபு மண்டலத்தை பின்பற்றவது ஆகியவற்றால் சருமம் ஹைட்ரேட்டிங்காகவும் பொலிவாகவும் இருக்கும்.