தொடர் வேலைநிறுத்தங்களின் பின்னணியில் ரணில்

இந்த நாட்களில் நாடு முழுவதும் வேலை நிறுத்தங்களை முன்னெடுப்பது தேசிய மக்கள் சக்தியல்ல என அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த வேலைநிறுத்த நடவடிக்கைக்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமை தாங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் திட்டம்

வரவு செலவுத் திட்டத்தில் 25000 ரூபாவினால் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று கூறியது அதிபரே எனவும், 25000 ரூபாவை ஒரு பிரிவினருக்கு வழங்கி மற்றொரு பிரிவினருக்கு வழங்கமால் விட்டதும் அவரே என்றும் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.

தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர்கள் தெருவில் இறங்க வேண்டும் என்பதற்காகவே அரசு இந்த திட்டத்தை உருவாக்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.