அனுராவின் புதிய அமைச்சர்கள் விபரம் !

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இலங்கையில் நடந்து முடிந்த 10 ஆவது நாடாளும்ன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்றுள்ல நிலையில் இன்று புதிய அமைச்சரவை நியமனம் இடபெற்றுகின்றது.

அந்தவகையில் முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் அமைச்சரவை விபரங்கள்
பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

விஜித ஹேரத் – வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

கே.டி.லால்காந்த – விவசாயம் , கால்நடை , நீர்ப்பாசனம் , காணி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு ,பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட ., சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதாரம் , ஊடகம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரம் ,விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

புதிய அமைச்சரவை சத்தியப்பிரமானம் இன்று!

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake,) முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளது.

ஜனாதிபதி முன்னிலையில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு குறித்த பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதுடன், அமைச்சரவை அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாணமும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நவம்பர் (21) காலை. புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 11.30க்கு வழங்குவார் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் மரணம்!

அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லேவெவ-கும்புருயாயே பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 72 வயதுடைய எல்லேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர், அரலகங்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீரில் மூழ்கி இருவர் பலி!

தெதிகம மற்றும் கிரிந்த பொலிஸ் பிரிவுகளில் நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர்.

இந்த சம்பவங்கள் நேற்று (17) பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தெதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகொட ஓயாவில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

ஜயலத்கந்த, தெதிகம பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

காணாமற்போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கிரிந்த – யோதகண்டிய குளத்தில் நீராடச் சென்ற கிரிந்த என்ற நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணாமல் போனவர் எல்பிட்டிய, பொரவாகம பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடையவர் என தெரியவருகிறது.

விசாரணையில் சுற்றுலாவிற்கு வந்தவர்களில் ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தங்காலை பிரிவு பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட இராணுவ வீரர்கள்!

மன்னார் – யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர்.

இதன் போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர்கள் மூளைக் காய்ச்சல் ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.

இதை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா உறுதி படுத்தினார்.

இந்த நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்த வைத்திய தரப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில், அங்கு பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்த 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இன்றைய ராசிபலன்கள் 18.11.2024

மேஷம்:

உற்சாகமான நாளாக அமையும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மாலையில் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்:

மகிழ்ச்சியான நாள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். ஒரு சிலருக்கு வெளியூர் களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். மாலையில் குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். அலுவலகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:

தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், சுபச் செலவாக இருக்கும் என்பது ஆறுதல் தரும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத் தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

கடகம்:

தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுக ளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பாராத பொருள் சேர்க் கைக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

சிம்மம்:

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். தந்தையுடன் கருத்துவேறுபாடு வரக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் உங்களைக் கடிந்துகொண்டாலும், பொறுமையுடன் இருப்பது பிற்காலத்துக்கு நல்லது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உண்டு.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி:

இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.

துலாம்:

மனதில் இனம் தெரியாத சஞ்சலம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உறவினர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் உங்கள் பணிகளை ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும். திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர், நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்:

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைக்கக் கூடும்.

தனுசு:

இன்று எதிலும் பொறுமை அவசியம். உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவினர் களிடம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்:

தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் கிடைக்கும்..உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.

கும்பம்:

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

மீனம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூடுமானவரை வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்துவிடவும். தந்தைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் உதவியுடன் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

தேர்தல் கடமையின் போது மரணித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டிற்கு சென்ற பதில் அரசாங்க அதிபர்!

இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் கடமையின் போது உயிரிழந்த, பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்கு சென்று அவர்களது துக்கத்தில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்கெடுத்துள்ளார்.யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி சுபாஷ், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இணைந்த நிலையில், உயிரிழக்கும் போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார்.இவ்வாறான நிலையில், கடந்த பொதுத் தேர்தல் தினத்தன்று யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தேர்தல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை திடீரென உயிரிழந்துள்ளார்.தேர்தல் காலத்தில் தெரிவித்தாட்சி அலுவலராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கடமையாற்றிய நிலையில், தேர்தல் காலத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்த காரணத்தினால் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கெடுத்தார்.

அரச கட்டிடம் ஒன்றில் முறைகேடு!

பொரளை ருஹுனு கலா மாவத்தையில் கைவிடப்பட்ட அரச கட்டிடம் தற்போது பல்வேறு முறைகேடுகளின் புகலிடமாக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பொரளை இளைஞர் சேவை மன்றத்திற்கு முன்பாக குறித்த அரச கட்டிடம் அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் கிராம உத்தியோகத்தர் அலுவலகமாக செயல்பட்டு வந்த இந்த கட்டிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டிருந்தது.

இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில், இக்கட்டிடம் போதைப்பொருள் பாவனையாளர்களின் புகலிடமாக அப்பகுதியில் மாறியுள்ளது.

போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகம் கூடும் இப்பகுதிக்கு, இரவு நேரங்களில் வந்து செல்வது ஆபத்தானது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கட்டிடத்திற்கு எமது குழு சென்ற போது, அங்கு கடும் துர்நாற்றம் வீசியதுடன், போதைப்பொருள் உட்கொண்டதாகக் கருதப்படும்  பெண் ஒருவர் அங்கே படுத்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

பொரளை போன்ற புறநகர் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று மக்களுக்கு துன்பம் தரும் இடமாக மாற்றுவதற்கு இடமளிக்காமல், அதனை  பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு அல்லவா?

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை அணி !

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (17) இடம்பெறவுள்ளது.

பல்லேகலயில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது.

இதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் யாருக்கு வெளியான அறிவிப்பு!

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். 

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17)  காலை இடம்பெற்றது.

இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றன.

விவாதங்களின் பின்னர் குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற் குறித்த தீர்மானம் இவ்வாறு எடுக்கப்பட்டதாக யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.