இந்தியாவில் இருந்து இலங்கை வந்த சகோதரன் சகோதரி கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரனை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஏறாவூர் தளவாய் பகுதில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து முற்றுகையிட்டபோது அங்கு எந்தவிதமான ஆள் அடையாள ஆவணங்களும் இல்லாமல் மதுரையைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அங்கிருந்த இருவரையும் ஏறாவூர் பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மதுரையைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணும் அவரின் சகோதரரான 51 வயதுடைய ஆணும் கடந்த ஜுன் மாதம் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து இந்த பகுதில் தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை கணவன் மனைவி கொலை தொடர்பில் கொடுக்கப்பட்ட வாக்கு மூலம்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் வீரபத்திரர் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி இருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (30-10-2024) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இருவரும் கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் குறித்த கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் மூவரிடம் பருத்தித்துறை பொலிஸார் வாக்குமூலம் பெற்றுவருகின்றன.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் 53 வயதுடைய மாணிக்கம் சுப்பிரமணியம், அவரது மனைவியான 54 வயதுடைய சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளனர்.

அவர்களின் வீட்டுக்கு நேற்று காலை அயலவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் சடாகமாக காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸார், மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு போலீஸ் பொறுப்பதிகாரி சேந்தன் தலமையிலான குழுவினர் என பல குழுக்கள் தீவிர விசாரணைகளின் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்ய அமரசிங்க தலமையில் மூவரிடம் தொடர் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றது.

மூவரில் ஒருவர் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் 28/10/2018 அன்று இடம்பெற்ற இரட்டை கொலை, மற்றும் அவனது மனைவியின் தாயாரையம் கொலை செய்யும் முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் உத்தியோகபூர்வமாக கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கனடாவில் இலங்கை தமிழர் அதிரடி கைது!

கனடாவில் உள்ள நோபல்டன் நகரில் வீடொன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகல் நேரத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்ல முயன்ற 2 சந்தேக நபர்கள் அங்கிருந்த பொலிஸாரின் வாகனம் மற்றும் பொது மக்களின் வாகனங்கள் மீது மோதி சென்றதாகக் கூறப்படுகிறது.

குறித்த சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்ற விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

இவ்வாறான நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதானவர் இலங்கைத் தமிழர் யசந்தன் கந்தையா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 10 குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் போது இவருக்கு எதிராக தடை உத்தரவுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்வபத்துடன் தெடர்புடைய 2வது சந்தேக நபரின் விரிவான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மின்னல் தாக்கியதில் 11வயது சிறுமி பலி!

மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதென்ன பண்ணை பகுதியில் பதிவாகியுள்ளது.

நேற்று (31) பிற்பகல் மின்னல் தாக்கியதில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

தந்தையும் சகோதரனும் வீட்டின் பின்புறத்தில் அஸ்திவாரத்தை வெட்டி கொண்டிருந்த நிலையில், அதற்கு உதவிய சிறுமியே இந்த அனர்த்தத்திற்கு உள்ளானார்.

இவரது சகோதரரும் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தந்தைக்கு விபத்து எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய ராசிபலன்கள் 01.11.2024

மேஷம்:

மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தந்தைவழியில் சில செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த பணிநெருக்கடி சற்று குறையும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகமுடியும்.கிருத்திகைநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தந்தை வழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்:

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.

மிதுனம்:

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கடகம்:

மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வருகையால் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள் வார்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்:

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி:

அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பது உற்சாகமும் மகிழ்ச்சியும் தரும். வியாபா ரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

துலாம்:

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். மகான்களை தரிசிக்கவும் அவர்களின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் செய்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகான்களை தரிசிக்கவும் அவர்களின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு உண்டாகும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் ஏற்படும் சில பிரச்னைகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு:

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:

அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். லாபமும் அதிகரிக்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.

கும்பம்:

தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். அலுவல கத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

தேங்காய் தட்டுப்பாடு நீடிக்கும்!

இலங்கையில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே,

உரிய நேரத்தில் மழையின்மை மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தேங்காய் உற்பத்தியில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக தேங்காய் கருவை இறக்குமதி செய்வது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை திருத்தம்!

விலை சூத்திரத்திற்கு அமைய மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கு முந்தைய கடந்த 10 மாதங்களில் எரிபொருட்களின் விலை மூன்று தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து தடவைகள் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளன.

மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் கீழ் ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நவம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது

இலங்கைக்கு மனிதாபிமான உதவி வழங்கிய சீனா!

இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இந்த உதவி வழங்கப்படவுள்ளது.

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை (100,000 அமெரிக்க டொலர்) நன்கொடையாக வழங்கியது.

அந்த நிதி உதவிக்கு மேலதிகமாக இந்த உதவியும் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் குறிப்பிடுகிறது.

அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு!

பொகவந்தலாவ மற்றும் பேலியகொடை பொலிஸ் பிரிவுகளில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (30) காலை பொகவந்தலாவ பொகவான தோட்ட பகுதியில் உள்ள கெசல்கமு ஓயாவில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

05 அடி 02 அங்குலம் உயரம் கொண்ட 35 தொடக்கம் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் இறுதியாக கருப்பு நிற நீண்ட கால்சட்டை மற்றும் கை குட்டையான வெள்ளை சட்டையை அணிந்திருந்ததாகவும், இடது காதில் அம்பு வடிவ காதணியை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான திடீர் மரண பரிசோதனை செய்யப்பட்டு டிக்-ஓயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கண்டி வீதியில் பேலியகொடை நடைபாதையில் மற்றொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

திடீர் மரண பரிசோதனை செய்யப்பட்டு சடலம், கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் சுமார் 55 முதல் 60 வயது மதிக்க தக்கவர் என்றும்  05 அடி 05 அங்குலம் உயரம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டார் முன்னாள் இராஜாங்க அமைச்சர்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வததேவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தேவிற்கு சொந்தமான மிரிஹான எம்புல்தெனிய சாலாவ வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, குறித்த வீட்டிற்குச் சென்று வாகனத்தை சோதனையிட்டனர்.

இலக்கத் தகடு இல்லாத சம்பந்தப்பட்ட கார் கடந்த 26ம் திகதி கண்டறியப்பட்டது.

குறித்த வீட்டில், முன்னாள் அமைச்சரின் மனைவியின் தாயார் வசிப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரத்வத்தேவின் பிரத்தியேக செயலாளர், கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் அந்த காரை தமது வீட்டின் வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடுகள் மற்றும் சாவி இல்லாத அந்த சொகுசு காரை மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்ல பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.