வாகன மோசடி தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளை பொய்யாக குறைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக வாகன இறக்குமதி சந்தைப்பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்துவதற்கு எதிர்பார்க்கும் பின்னணியில் இந்த மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சமூக ஊடகங்களில் வாகனங்களின் போலி விலைகள் பரப்பப்பட்டு வருவதாகவும், பயன்படுத்திய வாகனங்களின் சந்தை மதிப்பைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலுள்ள வாகன இறக்குமதி நிறுவனங்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஏ. எம். டபிள்யூ. எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய வாகனங்களுக்கு பொய்யான விலைகளைக் குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்கள் மூலம் பல செய்திகள் திருத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய வாகனங்களின் விலையை கணக்கிட சந்தை விலை மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய வாகனங்களின் விலைகளுக்கு பொய்யான விலையை விளம்பரம் செய்து தற்போது பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலையை குறைக்க முயற்சிப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

எனவே மக்கள் நம்பகமான அல்லது அங்கீகரிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து தகவலை சரிபார்க்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து புதிய அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகிய செய்தி!

2025ம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

பெரும் தொகை பணத்தினை அச்சிட்ட மத்திய வங்கி!

இலங்கை மத்திய வங்கி கிட்டத்தட்ட நூறு பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தின் மூலம் 36.1 பில்லியன் ரூபாயும் அச்சிடப்பட்ட நாணயத்தின் பிரீமியம் ஏலத்தின் மூலம் ஏழு நாட்களில் 70 பில்லியன் ரூபாயும் திரட்டப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி, பல பணப்புழக்க கருவிகள் மூலம் உள்ளூர் சொத்துக்களுக்காக கிட்டத்தட்ட நூற்று ஆறு பில்லியன் ரூபாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் வங்கி அமைப்பில் சேர்க்கப்படும் மேலதிக பணம் 190 பில்லியன் ரூபாய்களாக உயர்கிறது. இது மத்திய வங்கியின் வழமையான திறந்த சந்தை செயற்பாடுகளுடன் ஒத்துப்போவதோடு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுசெய்யாது.

அதேசமயம் மத்திய வங்கிச் சட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு உரிய பணத்தை அரசாங்கம் அச்சிட முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிலிப்பைன்ஸ் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிலிப்பைன்சை தாக்கிய டிராமி புயலால் கடந்த வாரம் அங்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளக் காடாக மாறியிருக்கின்ற நிலையில் மேலும் 40 பேர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன.

நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் பலர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 40 பேர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

யாழில் நிறைவெறியில் அட்டகாசம் செய்த பொலிசார்!

யாழ்ப்பாணம் – இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு முன்பு இன்றையதினம் மாலை நிறைவெறியில் பொலிஸ் முச்சக்கரவண்டியில் சென்ற இரண்டு பொலிஸார் காரை பின்பக்கமாக மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த பகுதியில் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது நிலத்தில் நிறைவெறியில் உருண்டு பிரண்டு கத்திக் குளறியபடி இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொலிஸாரால் விபத்துக்கு உள்ளான கார் சான் ரூறிஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது எனத் தெரியவருகின்றது.

குறித்த காரை வாடகைக்கு ஒருவர் எடுத்துச் சென்ற போதே பொலிஸார் முச்சக்கரவண்டியில் நிறைவெறியில் சென்று காரை இடித்துத் தள்ளியுள்ளனர்.

இந்தநிலையில் அங்கு மக்கள் கூடத் தொடங்கவே அவர்களை இரண்டு பொலிஸாரும் அச்சுறுத்தி தள்ளாடித் தள்ளாடி நிலத்தில் உருண்டு பிரண்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த இரண்டு பொலிஸாரும் கடமையாற்றும் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த சிவில் உடைதரித்த பொலிசார் பொதுமக்களை அங்கிருந்து அகற்ற முற்பட்டதுடன் கார் உரிமையாளருடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்தி வீதியில் அட்டகாசம் செய்த பொலிஸாரை உடனடியாக அங்கிருந்து அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் மோதி இருவர் பலி!

அஹுங்கல்ல மற்றும் பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் நேற்று (28) பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு அஹுங்கல்ல, கல்பொக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பியகம, கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பேராதனை, கெட்டம்பே மற்றும் ரஜவத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெலிஓயா, அலுதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் வெளியாகிய செய்தி!

சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர்  டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்பு நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும்  லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதான முனையம் வெள்ளத்தில் மூழ்கியமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்புடன் வந்த சரக்குக் கப்பல் நேற்று (28) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் எரிவாயு கையிருப்பு விநியோகிக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர்  டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்தார்.

இன்றைய ராசிபலன்கள் 29.10.2024

மேஷம்:

உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.. பிள்ளைகள் வழியில் வீண்செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷபம்:

மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மிதுனம்:

சாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

கடகம்:

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்ப தற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நண்பர்களிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

சிம்மம்:

உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக் காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகக்கூடும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உண்டு.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி:

மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத் தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக் கூடும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர், நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்:

மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத் தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக் கூடும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர், நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்:

எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவர வுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைக்கக் கூடும்.

தனுசு:

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக் குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்:

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.. தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் பெரிதாக பாதிப்பு இருக்காது.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.

கும்பம்:

இன்று எதிலும் நிதானமான செயல்பாடு அவசியம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வது ஆறுதலாக இருக்கும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் சங்கடங்களைச் சந்திக்க நேரிடும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

மீனம்:

அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வேலை விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

தடம் புரண்ட புகையிரதம்!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) காலை கொம்பனி வீதி புகையிரத நிலையத்தில் தடம் புரண்ட புகையிரதம், புகையிரத தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திலித் வழங்கிய உறுதிமொழி

கௌரவமான பொது சேவையை உருவாக்குவதற்கு தானும் தனது குழுவினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வஜன அதிகாரத்தில் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

துணிச்சலான எதிர்க்கட்சியை உருவாக்கி இதற்காக செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களின் குறிப்பாக அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மரியாதைக்குரிய பொது சேவையை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? அரசு ஊழியர்களுக்கு அவர்களின் குழந்தைகளின் கல்வி, தங்குமிடம், அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் குறித்த எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை வழங்க நாங்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும். வெற்றியடைய வேண்டிய மக்களை வெற்றியடையச் செய்வதற்காக நாங்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும். எமது அனுபவங்களின் ஊடாக அதனைச் செய்ய எங்களால் முடியும். அனைவரினது உயர்வையும் காண விரும்புவதற்காக இந்த பாராளுமன்றத்தை நிரப்புவதற்கு துணிச்சலான எதிர்க்கட்சியாக எதிர்க்கட்சியில் அமரவுள்ளோம்” என்றார்.