லண்டனில் வெறும் 25 பவுண்டுகளுக்கு பல் வைத்தியம் பார்க்கும் ஈழ தமிழச்சி!

இந்தியாவில் நாம் 10 ரூபா மருத்துவர் பற்றி அறிந்து இருக்கிறோம். பின்னர் அதுவே திரைப்படமாக மாறி அதில் நடிகர் விஜய் நடித்திருந்தார். தற்போது மக்கள் சேவை உணர்வோடு, ஈழத்து தமிழ் பல் மருத்துவரான மாளவி அவர்கள்,

லண்டன் ஹரோவில் பல் வைத்தியம் செய்து வருகிறார். வெறும் 25 பவுண்டுகளுக்கு தமிழில் உரையாடி, உங்கள் பற்களை முதல் கட்டமாக சுத்தம் செய்து, என்ன பிரச்சனைகள் இருக்கிறது. மற்றும் வர உள்ளது என்று இலவசமாக அறிந்து கொள்ள முடியும்.

சாதாரணமாக பல் சுத்தம் செய்ய என்று சென்றாலே, 150 பவுண்டுகளை வாங்கும் பல் வைத்தியர்கள் மத்தியில். லண்டன் தமிழர்களுக்கான தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டுள்ளார் மருத்துவர் மாளவி… மேலும் சொல்லப் போனால்… (வீடியோ கீழே உள்ளது)

இவர் ஏற்கனவே பல முறை தமிழ் ஈழம் சென்று, வட கிழக்கில் இலவச முகாம்களை நடத்தி, ஏழை மக்களுக்கு பல வைத்தியம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையம். தற்போது லண்டன் ஹரோவில் கொலிஜ் றோட்டில் கொம்பிளீட் ஸ்மைல்(Complete Smiles) என்னும் பல் வைத்திய நிலையத்தை திறந்து,

பல தமிழர்களுக்கு உதவி வருகிறார். அவரை பாராட்டாமல் இருக்க முடியாது. சில வயதான தமிழர்கள் ஆங்கிலம் பேச வெட்கப்பட்டு பல் வைத்தியர்களிடம் செல்வது இல்லை. ஆனால் இங்கே நீங்கள் தமிழில் பேசி உரையாடி, பல் வைத்திய சேவையை நியாய விலையில் பெற்றுக் கொள்ள முடியும்