யாழ்.பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் கொரோனாவுக்கு பலி!

யாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவருகின்ற சிற்றூழியர் ஒருவர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நபரின் குடும்பத்தில் நெருக்கமான உறவினர்கள் சிலர் ஏற்கனவே தொற்றுக்குள்ளாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிகிச்சை பெற்றுவந்த குறித்த ஊழியர் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன்னர் யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஒருவரும் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleவடமாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி!
Next articleயாழ்.ஆணைக்கோட்டை – முள்ளியில் வாள்களுடன் இரு ரவுடிகள் கைது!