யாழில் சற்றுமுன் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு!

யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

அதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவரும், கோப்பாய் வடக்கை சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை யாழ் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமுல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட பிள்ளையார்!
Next articleஇன்றைய இராசிபலன்கள் (21.08.2021)