முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட பிள்ளையார்!

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பக்தர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் உயிலங்குளம் வேட்டையடைப்பு பிள்ளையார் ஆலயம் பிராந்திய வைத்திய சுகாதார அதிகாரிகளினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று காலை ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழா மற்றும் அன்னாதான நிகழ்வின் போது ஆலய தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார அதிகாரிகள், சுகாதார விதிமுறை மீறப்பட்டதை அவதானித்த நிலையில் ஆலயத்தை தனிமைப்படுத்தினர்.

மேலும் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை நடத்திய பூசகர்களையும் சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

Previous articleஊரடங்கு காலப்பகுதியில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது எப்படி?
Next articleயாழில் சற்றுமுன் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு!