யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு…..!

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த சிறுமி வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு பூவரசம் குழை வெட்டுவதற்காக கிணற்றுக்கட்டில் ஏறி நின்று வேளையில் தவறி விழுந்துள்ளார்.உடனயாக அவர் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleயாழில் விசமிகளால் உந்துருளிக்கு தீ வைப்பு : முற்று முழுதாக எரிந்து நாசம்!!
Next articleமாணவிகளின் தலைமுடியை வெட்டும் மர்ம நபரை மடக்கிப்பிடித்த பயணிகள்!