பிறந்திருக்கும் புதிய மாதத்தில் அதிஷ்டத்தை அல்லப்போகும் மூன்று ராசிக்காரர்கள்

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் எடுத்த காரியத்தில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்க எதிர்பார்க்கும் முக்கிய விஷயங்கள் நடைபெறுவதில் கால தாமதம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் துணிச்சல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கக் கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. வெளியிடங்களில் தேவையற்ற பேச்சு வார்த்தைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய உரிமையை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்வீர்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெறுவீர்கள். புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் வெற்றிகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபார ரீதியான விருத்தி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு கையில் பணப்புழக்கம் இருக்கும்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு நற்பலன்கள் கிட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உங்களுடைய திறமைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் மாற்றம் சந்திக்க இருக்கிறீர்கள். விட்டுச் சென்றவர்கள் உங்களை தேடுவார்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தனலாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. எடுக்க கூடிய முடிவுகளில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார உயர்வும் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேகம் விவேகமல்ல என்பது நினைவில் இருக்க வேண்டும்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு சாதகமாக செயல்பட கூடும் என்பதால் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல பலன் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முகத்தில் ஒரு புது பொலிவு தென்படும். இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் கூடும். பெற்றோர்களுடைய பேச்சை கேட்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிட பயணங்களில் கவனம் தேவை.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் பட்டதை பேசி விடுவீர்கள். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்பு சுமை ஏற்படும் வாய்ப்பு உண்டு. எதிலும் அலட்சியம் தவிர்ப்பது உத்தமம்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவுகள் எடுப்பது நல்லது. சாதகமற்ற அமைப்பு என்பதால் பொறுமை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற விமர்சனங்கள் உருவாகலாம். ஆரோக்கியம் சீராகும்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து புதிய செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். புதிய யுத்திகளை கையாளுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும் இதனால் டென்சனுடன் காணப்படுவார்கள்.

Previous articleமக்களுக்கு இன்பதிர்ச்சி அளித்த லிட்ரோ நிறுவனம்
Next articleயாழிற்கு வருகைத்தரவுள்ள அண்ணாமலை