யாழில் பல்கலைக்கழக மாணவனின் மடிகணனியை திருடிய சந்தேக நபர்கள்!


யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட மாணவனின் மடிகணனி ஒன்று களவாடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.திருநெல்வேலியில் வாடகை வீடொன்றில் தங்கிருக்கும் குறித்த மாணவன் தனது மடிகணனினை ஜன்னலின் அருகில் வைத்திருந்த நிலையில் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த திருடர்கள் மடிகணனினை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த மாணவனின் கற்றல் தொடர்பான விடயங்கள் அதில் அடங்கிருக்கும் நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

Previous articleகனடாவில் பீப்பாய்க்குள் சடலமாக கிடந்த ஓரினச்சேர்க்கையாளர்!
Next articleமனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்!