யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வறணி பகுதியிலிருந்து கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஊடாக சென்று கொண்டிருந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதியுள்ளார்.

இதில் மந்திகையை சேர்ந்த அருந்தவராசா அஜந்தன் என்ற நபரே உயிரிழந்துள்ளார். சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Previous articleஇன்றைய ராசிபலன் 20/05/2022
Next articleநேற்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு