யாழில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வாகனத் திருத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளின் பாகம் ஒன்று மின்சாரம் மூலம் ஒட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது தீப்பற்றியுள்ளது.

இதனையடுத்து வாகன திருத்துமிடத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தபோதும் மோட்டார் சைக்கிளின் பெரும் பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

Previous articleகிளிநொச்சியில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை!
Next articleயாழ்.அனலைதீவு கடற்கரையில் மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்கள்