கிளிநொச்சியில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை!

கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தையொன்று வீட்டின் முன் உள்ள வாய்க்காலில் விழுந்து பலியாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இச்சம்பவமானது இன்று(04) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் முன் பகுதியில் உள்ள வாய்க்காலில் குழந்தை தவறி விழுந்துள்ளது.

இவ்வாறு விழுந்த குழந்தையை பெற்றோர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதையடுத்து மருத்துவர்கள் பரிசோதனை முடிவில் குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நேற்றையதினம் வவுனியாவில் இதேபோல் 03 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Previous articleகனடாவில் இரண்டு நாட்களில் 20 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி
Next articleயாழில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்