நான்கு லட்சம் பெறுமதியான கைத்தொலைப்பேசியை தவறவிட்ட யாழ் புலம்பெயர் நபர் : கிளிநொச்சி இளைஞன் செய்த செயலால் பலரும் பாராட்டு!

நான்கு லட்சம் பெருமதியான தவறவிடப்பட்ட கையடக்க தொலைப்பேசியை உரியவரிடம் ஒப்படைத்த புதுமுறிப்பு இளைஞனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்றையதினம் கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள கிராமிய பாடசாலை ஒன்றுக்கும், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கும் உதவி செய்யும் நோக்கில்
புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒருவர், கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில் அவரது நான்கு இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியினை தவறவிட்டு தேடுதலில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது குறித்த தொலைபேசியினை கண்டெடுத்த கிளிநொச்சி – புதுமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை தவக்குமார் என்ற இளைஞன், அதனை உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.

இளைஞனின் இச்செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஅதிஷ்டத்தை அள்ளப்போகும் மூன்று ராசிக்காரர்கள் : சிலருக்கு எச்சரிக்கை!
Next articleபொருளாதார சிக்கலினால் பிள்ளைகளுக்கு உணவுகொடுக்க முடியாததால் தாய் எடுத்த விபரீத முடிவு