யாழ். சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் ஜீலை – 1ம் திகதி மீள ஆரம்பம்..!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் ஜீலை 1ம் திகதி மீள ஆரம்பிக்கும் என விமான சேவைகள் அமைச்சர் அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா கூறியுள்ளார்.

சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்பதாகவும்,

அத்தோடு புலம்பெயர் தமிழர்கள் தமது தாயக நிலத்துக்கு நேரடியாக விமானமூடாக வருகைதர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை பார்வையிட்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Previous articleயாழ் உதைப்பந்தாட்ட போட்டியில் இடம்பெற்ற அடிதடி
Next articleயாழில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்!