யாழில் மின்சாரம் தாக்கியதால் இளைஞன் ஒருவர் பலி!

மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று யாழ்ப்பாணம் இணுவில் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இணுவிலைச் சேர்ந்த சதீஸ் யோகராசா (26) என்னும் இளைஞன் என பொலிஸாரின் விசாரனையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் அறைக்குச் சென்றவர் அந்த அறையில் இருந்த மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

Previous articleயாழிற்கு பெருமை சேர்த்த யாழ் இந்துக் கல்லூரி மாணவன்!
Next articleயாழில் 600 லீற்றர் டீசல் பதுக்கியவர் கைது!