யாழில் மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த 5 பிள்ளைகளின் தந்தை!

யாழில் மரத்தில் இருந்து கீழே விழுந்த 05 பிள்ளைகளின் தந்தையான 65 வயது நபர் பரிதாபமாக இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மர்த்தில் இருந்து விழுந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புலோலி மத்தி – பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் நவரட்ணம் (வயது 65) என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் உறவிளர் வீட்டில் உள்ள காணியில் தேங்காள் பறிக்ப ஏறியபோது தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இந்த மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

Previous articleவவுனியா – செட்டிக்குளம் பகுதியில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த பொதுமக்கள் : கடுப்பில் பேருந்தை இயக்க மறுத்த டிரைவர் !
Next articleயாழில் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 21 வயது இளைஞன்!