அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞன் பலி!

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொணட போது இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் மாத்தறை நகரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வெள்ளைக்கோட்டனை கடக்க முயன்ற இளைஞன் எதிரே வந்த வேனுடன் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மாத்தறை, திஹாகொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் மாத்தறை நகரில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயானை தாக்குதலுக்கு இலக்காண விவசாயி ஒருவர் பலி!
Next articleஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் மீட்கப்பட்ட கோடிக்கணக்கான பணம்! : ஊடகவியலாளர் சங்கம் எழுப்பிய கேள்வி!