யாழில் மாமியாரையும் மைத்துனரையும் கடுமையாக தாக்கிய மருமகன் : பின்னர் நடந்த அசம்பாவிதம்!

யாழில் மாமியாரையும் மைத்துனரையும் நபர் ஒருவர் கடுமையாக தாக்கியதால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று யாழ்.சாவகச்சோி – மீசாலை கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றில்இடம்பெற்ற காணித்தபராற்றின் காரணமாக மைத்துனரையும் மாமியாரையும் சந்தேக நபர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் மாமியாரின் தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்தான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleயாழில் நாளை அரச உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் விசேட பெற்றோல் விநியோகம் !
Next articleயாழ்.போதனா வைத்தியசாலையில் தங்கியிருக்கும் நோயாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!