யாழில் வீட்டு வாசலின் முன் நின்ற இளைஞனுக்கு நடந்த பயங்கரம் : வைத்தியசாலையில் அனுமதி!

யாழில் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞருக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று யாழ்.சித்தங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் சித்தங்கேணியில் இருந்து வட்டுக்கோட்டை நோக்கி சென்ற வாகனம் வீதியை விட்டு விலகி
விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது இளைஞன் வீட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கதவை திறக்க முயன்றபோது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் இளைஞரின் கால் முற்றாக முறிந்துள்ளதையடுத்து மற்ற காலும் சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் 1990 என்னும் அவசரசேவை நோயாளர் காவு வண்டி மூலம் இளைஞனை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

வாகனத்தின் சாரதி வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Previous articleவெளிநாட்டில் உயிரிழந்த யாழினை சேரந்த பெண் : வெளியான காரணம்!
Next articleயாழில் எரிபொருளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ந மோட்டார் சைக்கிள் இன்ஜினுள் மண்ணை கொட்டிய விஷமிகள்!