யாழில் ஊசி மூலம் போதைமருத்து செலுத்திய பூசகர் பலி!

யாழில் நணபர் வீட்டிற்கு சென்று ஊசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துக் கொண்ட நிலையில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்றுமாலை திருநெல்வேலியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பூசகர் என தெரியவந்துள்ளது.

இவர் நண்பர்களுடன் சேர்ந்து நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று ஊசி மூலம் போதைப்பொருள் எடுத்துக்கொண்டதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.

இவர் போதைப்பொருள் செலுத்தியதயடுத்து மயங்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் கையில் ஊசிமூலம்
ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றியதால் உயிரிழப்பு ஏற்பட்டது என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

Previous articleயாழில் சாரதிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆட்டோவை மொதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்!
Next articleபுதுக்குடியிருப்பில் இருந்து தெரிந்த ஆண் நண்பரை நம்பி வீட்டை விட்டு யாழிற்கு வந்த சிறுமிகளுக்கு நடந்த அசம்பாவிதம் !