யாழிற்கு விமான சேவையை ஆரம்பிக்கும் பிரபல இந்தியா விமான சேவை நிறுவனம்!

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை அடுத்த மாதம் முதல் எயார் இந்தியா ஆரம்பிக்கவுள்ளது.

பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வாராந்திர இரண்டு சேவைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியங்க பெர்னாண்டோ அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தில் 75 முதல் 90 இருக்கைகள் உள்ளன.

மேலும் இந்திய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதே இதன் நோக்கமாகும் என பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை ஜூலை 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க இலங்கை அதிகாரிகள் உத்தேசித்துள்ளனர்.

Previous articleநாட்டில் கையடக்க தொலைப்பேசியின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்!
Next articleவெளியானது உயர்தர பரீட்சை முடிவுகளில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்களின் விபரம் !