கனடாவின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு !

கனடாவின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டாவது காலாண்டில் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதமாக பதிவாகியுள்ளது.

முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இரண்டாவது காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தி 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

வீடுகளுக்கான முதலீடு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீடித்து நிலைத்திருக்கும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான செலவும் குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous articleவவுனியாவில் கோதுமை மாவின் விலையில் தீ !
Next articleசே குவேராவின் இளைய மகன் திடீர் மரணம் : வெளியான காரணம்!