யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் விடியங்காடு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு கால் முறிவு ஏற்பட்டதுடன், அவனது 48 வயதுடைய தந்தையும் 42 வயதுடைய தாயும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஎரிபொருள் விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
Next articleகடூழிய சிறைத்தண்டனையில் இருந்து விடுதலையாகி திரைப்படங்களில் நடிக்க தயாராகும் ரஞ்சன்!