யாழ்.நல்லுாரில் வீடொன்றின் மீது விஷமிகள் கல்வீசி தாக்குதல்..! பொலிஸார் தீவிர விசாரணை..

யாழ்ப்பாணம் நல்லூரில் வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான முருகவேல் சதாசிவத்தின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் காரணமாக வீட்டின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து யாழ். காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇலங்கை அணியை போன்று அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றிபெறலாம்! – ஜனாதிபதி
Next articleபோதைப்பொருள் வைத்திருந்த 19 வயதுடைய பெண் அதிரடி கைது!