யாழில் பொதைப்பொருள் பாவித்து 10 பேர் பலி : 320 பேர் கைது !

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையால் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் போதைப்பொருளுடன் 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள போதைக்கு அடிமையான சிகிச்சை நிலையத்தில் இரண்டு மாத காலப்பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போதைக்கு அடிமையானவர்களில் 18 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் சுமார் 20 கிராமங்கள் போதைப்பொருளுக்கு அடிமையான கிராமங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleயாழில் புலிகளின் ஆயுதங்கள், நகைகளை தேடி நடத்தப்பட்ட அகழ்வு பணியில் ஈடுபட்டவர்களுக்கு கிடைத்தவை!
Next articleதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவன் : சோகத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு!