யாழில் பட்டம் விட்டு கவனயீர்ப்பு போராட்டம்!

அரசாங்கத்தின் கௌரவமான அரசியல் தீர்வைக் கோரி யாழ்ப்பாணம் அரியாலையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 100 நாள் போராட்டத்தின் 100 நாட்களை முன்னிட்டு, அரியாலையில் திங்கட்கிழமை (19) கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் சட்டத்தரணி அம்பிகா சிறிதரன் கலந்து கொண்டு வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வின் முக்கியத்துவம் மற்றும் மக்கள் எவ்வாறான பங்களிப்புகளை வழங்க வேண்டும் என தெளிவுபடுத்தினார்.

Previous articleவாயில்லா பிராணியை காரில் கட்டி தரதரவென வீதியில் இழுத்துச் சென்ற மருத்துவர்!
Next articleநாளை மற்றும் நாளை மறுதினமும் மின்வெட்டு! நேரமும் அதிகரிக்கப்பட்டது..!